கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வர்த்தகர்
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.

19,000 சிகரட்டுகள்
சந்தேக நபரான வர்த்தகர் இன்று அதிகாலை 12.50 மணிக்கு துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D-822 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வறந்தடைந்துள்ளார்.
வர்த்தகர் விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் திவுலப்பிட்டிய பகுதியை சேர்ந்த 58 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரிடமிருந்து 19,000 சிகரட்டுகள் அடங்கிய 95 சிகரட்டு காட்டுன்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.