மஹேல ஜெயவர்தன பதவி விலகல்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்று அணிகளின் கிரிக்கெட் மேம்பாட்டுக்கான பயிற்சியாளராக சஹீர் ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹேலவுக்கு புதிய பதவி
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டதன் காரணமாகவே அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களால் மஹேல ஜயவர்தனவுக்கு அணியின் “Global Head of Performance” என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான மூன்று அணிகளுக்கும் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் புதிய வீரர்கள் தேர்வு தொடர்பான அனைத்து பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.