யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று மாலை 4.00 மணியளவில் உந்துருளியில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவருக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதனால் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கொண்டு சென்றவேளை அவர் மயக்கமுற்றார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.