பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!
17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இந்திய அணி 09 முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.