பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும் ; சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று(20) வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகம்
சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றன என்றும் இதன் போது குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒரு பாம்பு காணப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட இருபது பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.