கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி; சரிந்தது திமுக கோட்டை !
திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 106 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.

முதலமைச்சராக தோல்வியை தழுவினார் ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கையில்,ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றிபெற்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்லில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார்.
கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து தேர்தலிலும் வெற்றி (திமுக) பெற்று வந்தார். தற்போது முதல் முறையாக 2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1996 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அதேபோல் முதலமைச்சராக இருந்து மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.