அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை
M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.