இந்தியப்படையினரை ஆச்சரியப்படவைத்த விடுதலைப் புலிகள்!
இலங்கையில் தமிழின அழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்தது.
இதன்போது இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள்.
இந்நிலையில் மக்களின் இன்னல்களை தீர்க்க விடுதலைப்புலிகள் வீறுகொண்டு எழுந்த சம்பவம் ஈழத்தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்றேதான் கூறவேண்டும்.
அக்காலகட்டத்தில் எண்ணிக்கையில் இந்திய அமைதிப்படையினை விட மிக குறைவாகவே விடுதலை புலிகள் இருந்தாலும், அவர்களின் தந்திரோபாய போர் முறைகள் இந்தியப்படையினரை ஆச்சரியப்படவைத்த சம்பவங்கள் ஏராளம்.
மிக குறைந்த படைபலத்துடன் ஓரு பெரும் இராணுவபடையினை அவர்கள் தன்னம்பிகையோடு எதிர்த்து நாட்டைவிட்டே வெளியேற்றிய சம்பவம் பல நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தது.
இந்தியபடையினரை நாட்டைவிட்டு வெளியேற்ற தன்னின மக்களுக்காய் தன்னையே ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் மற்றும் அன்னை பூபதி அவர்களின் அகிம்சை போராட்டம் என்பன ஈழத்தமிழர் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தது என கூறினால் அது மிகையகாது.
அவற்றில் ஒருசில சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.