தர்ஷன் பற்றிய லொஸ்லியா செம பதில்...
கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் லொஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் படுக்கையறை இருக்கும்படி காட்சியில் நடித்திருந்தனர்.
இதுகுறித்து நெட்டிசன்கள் பல சர்ச்சையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுயிருந்தனர்.
இதுதொடர்பில் பேட்டி ஒன்றில் லொஸ்லியா தெரிவித்ததாவது,
"தர்சனை எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே தெரியும்.
மேலும் அவரை எவ்வாறு பிக் பாஸில் பார்த்தேனோ அதே போல தான் தற்போது வரையிலும் இருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னை அவர் மிகவும் அக்கறையுடனும், அன்புடனும் பார்த்து கொண்டார்.
மேலும் நாங்கள் இருவரும் நிஜ வழக்கியில் எப்படி இருக்கிறமோ அதே போல தான் தற்போதும் இருக்கிறோம்.
ஒரு படம் தான் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோமே தவிர வேறொன்றும் இல்லை. அந்த படத்தில் தர்சனுடன் இணைந்து நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது." இவ்வாறு லொஸ்லியா தெரிவித்தார்.