இலங்கையில் 6 அடி நீள நாகப்பாம்பு; அச்சத்தில் உறைந்த பிரதேசவாசிகள்
நுவரெலியா அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அயோனா தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும் தேயிலை மலைப் பகுதியில், சுமார் 6 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய நாகப்பாம்புகள் தென்பட்டதில்லை என பிரதேசவாசிகள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்க்ப்படுகின்றது.

எனினும், கடந்த இரண்டு மாதங்களாகத் தேயிலை மலைப் பகுதியில் நாகப்பாம்பு நடமாட்டம் இருப்பதாகத் தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அது பிடிபட்டுள்ளது.
இதனியடுத்து நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நிபுணர் ஒருவரின் உதவியுடன் குறித்த பாம்பு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் பாம்பினை வனப்பகுதியில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.