லண்டன் செலவு; ரணில் மீதான வழக்கு விசாரணை இன்று
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆஜராகலாம் என கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரச நிதியை துஷ்பிரயோகம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.