அரசனைப் போலவோ இளவரசியை போலவோ வாழ்க்கை வாழ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
நாம் அரசனைப் போலவோ அல்லது ஒரு இளவரசியை போலவோ வாழ வேண்டும் என்ற நம் எல்லோர் மனதிலும் காணப்படும். ஆனால் அப்படிப்பட்ட ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் வீட்டில் செல்வ வளம் பல மடங்காக பெருக வேண்டும்.
அந்த மகாலட்சுமியின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும். வீட்டில் செல்வம் மழை பொழிவதற்காக அரச மரத்தை வைத்து இரண்டு பரிகாரங்கள் செய்யலாம்.
செய்ய வேண்டிய இரண்டு பரிகாரங்கள்
நினைத்த காரியம் நடக்க அரச மர பரிகாரம்
மனதில் ஏதாவது ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம் அல்லவா. நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு உகந்த நாள்
உதாரணத்திற்கு வீடு வாங்க வேண்டும், வாகனங்கள் வாங்க வேண்டும், கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும், பெண்ணுக்கு அல்லது மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் இப்படி எந்த கோரிக்கையை உங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்ற வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு ஒரு சொம்பு குடிக்கின்ற தண்ணீரில் கொஞ்சம் வெல்ல தூளை போட்டு, கரைத்து விடுங்கள்.
வெல்லம் கலந்த தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். அந்த தண்ணீரை கொண்டு சென்று அரச மரத்துக்கு அடியில் சுற்றி ஊற்றி விடுங்கள்.
மண் ஈரம் ஆகியிருக்கும் அல்லவா. அந்த மண்ணை எடுத்து நெற்றியில் லேசாக இட்டுக் கொண்டு, அரச மரத்தை மூன்று முறை வலம் வந்து நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது உடனே நடக்கும் 16 வாரம் இந்த பரிகாரத்தை செய்வதற்குள் நீங்கள் மனதில் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
செல்வ வளம் அதிகரிக்க ஏற்ற வேண்டிய தீபம்:
அரச மரத்துக்கு அடியில் ஒரு மண் அகல் விளக்கை வைத்துவிட்டு, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
தினமும் காலை 5.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அரச மரத்தை 3 முறை வலம் வந்தால் மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.
கூடவே விஷ்ணு பகவானின் ஆசிர்வாதமும் கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து 48 நாட்கள் இந்த விளக்கை ஏற்றினீர்கள் என்றால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்திற்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
வருமானம் இல்லை, நிரந்தரமாக ஒரு நல்ல வேலை இல்லை, தொழிலில் தொடர் நஷ்டம் இருக்கிறது என்றாலும் அந்த பண பிரச்சனையை எல்லாம் சரி செய்யவும் இந்த பரிகாரத்தை நாம் செய்து கொள்ளலாம்.
முடிந்தவர்கள் இந்த இரண்டு பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். முடியாதவர்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தாலும் நிச்சயம் பலன் கிடைக்கும்.
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து கூடவே விடா முயற்சியோடு உழைப்பையும் முதலீட்டாக போட்டால் நீங்களும் அரசரைப் போல வாழலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.