இள வயது முதலமைச்சர் பட்டியலில் இடம்பிடித்த தமிழக முதலமைச்சர் விஜய்!
தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் முதலமைச்சர் அரியணையில் ஏறியவர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 51 வயதான விஜய், 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேவேளை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுள்ளார். அந்தவகையில்,

ஜெயலலிதா - 1991-ஆம் ஆண்டு தனது 43வது வயதில் முதலமைச்சராகி முதலிடத்தைப் பிடித்தார்.
மு.கருணாநிதி- 44-வது வயதில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் - 50-வது வயதில் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார்.
காமராஜர் - 51-வது வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
விஜய் - தற்போதைய நிலவரப்படி 51 வயதில் முதலமைச்சராகி, காமராஜருக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து அண்ணாதுரை 57 வயதிலும், எம்.ஜி.ஆர் 60 வயதிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி 62 வயதிலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 68 வயதிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.