முதல் சட்டசபை கூட்டத்தொடர் ; தமிழக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் முதலமைச்சர் விஜய்
தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
இதில் பங்கேற்பதாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.

தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றார்.
இதனடிப்படையில், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினரா பதவியேற்றார். எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அதேவேளை போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார்.