வெற்றி சான்றிதழை மறந்த தவெக அமைச்சர்கள்; தள்ளிப்போன பதவியேற்பு!
தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (11) கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்த நிலையில் தவெக எம்எல்ஏ இருவர் வெற்றி சான்றிதழை எடுத்துவர மறந்ததால் அவர்களின் பதவியேற்பு பிற்போடப்பட்டுள்ளது.

பதவியேற்பு தள்ளிபோடப்பட்டுள்ளது
முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
எம்எல்ஏவாக பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச்சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை. தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
தவெக அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை. எதிர்வரும் 15 நாட்களுக்குள் அவர்களால் பதவியேற்க முடியும் என்பதால் அவர்களுக்காக பதவியேற்பு தள்ளிபோடப்பட்டுள்ளது.