உங்க கால் பெருவிரல் இப்படி இருக்கா; அப்போ இதெல்லாம் இருக்குமாம்!
உங்கள் கால்களில் உள்ள பெருவிரல் மற்றும் ஏனைய நகங்களை வைத்து, உங்கள் உடலில் உள்ள உபாதைகளை சொல்லி விட முடியும் என்று பிரித்தானிய மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கால் நகங்கள் மென் சிவப்பாக இருக்கும்.

அதுவே மஞ்சள் நிறமாக மாறிக் கொண்டு வருமே ஆனால், நங்களில் பங்கஸ் பிடிக்கிறது என்றும், காலுக்கு வரும் ரத்த ஓட்டம் சற்று குறைவடைந்துள்ளது என்றும், சக்கரை வியாதி உள்ளது என்றும் பொருள் என்கிறார்கள்.
இதேவேளை சிலரது கால் நகங்கள் நீல நிறமாக கூட மாறுகிறது. இப்படி மாற ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவடைவதே காரணம் என்கிறார்கள்.எனவே உடனே வைத்தியரை அணுகுவது நல்லது.
மேலும் கால் நகங்களில் இடை இடையே வெள்ளையாக காணப்படுவது உடலில் தாதுப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் குறைபாட்டை காட்டுகிறது, சிலரது நகங்கள் கறுப்பாக மாறி விடுகிறது.
இது ரத்தக் கட்டிகள் உள்ளதையும், ரத்த நாளங்கள் அடைபட்டுக் கிடப்பதையும் காட்டி விடுவதுடன், காலில் ரத்தக் கசிவு இருப்பதையும் எமக்கு காட்டி விடுகிறது.

