அண்ணாமலையை தொடர்ந்து லதா ரஜனிகாந்த் ஆரம்பித்த இயக்கம்; அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பமா?
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை லதா ரஜினிகாந்த் இன்று தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பான அறிவிப்பை காணொளி வாயிலாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில்,

சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி
"எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம். பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள்.
ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும். வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த மாநிலத்திற்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம் உங்களிடம் இருக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த ஒரு சிறந்த தளம். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்.
ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம் என லதா ரஜனிகாந்த் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க-விலிருந்து விலகிய அண்ணாமலையும், ஏற்கெனவே அவர் வைத்திருக்கும் 'We The Leaders - Lead The Change' அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது