புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை; அழைத்த ரஜனிகாந்த்...மறுத்த அண்ணாமலை
தமிழ் நாட்டில் The Movement Belongs to the People என்கிற ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
தமிழக பாஜக தலைவர்களிலேயே கவனிக்கத்தக்க ஒருவராக இருந்தவர் அண்ணாமலை மட்டுமே. அவர் பாஜக தலைவராக இருந்தபோது தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரித்தது. ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

பாஜகவிலிருந்து விலக முடிவெடுத்த அண்ணாமலை
இதையடுத்து பாஜகவிலிருந்து விலக முடிவெடுத்த அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
மேலும், அவரை சம்மதிக்க வைக்க பாஜக தலைமை முயன்றும் அது நடக்கவில்லை. இந்நிலையில் The Movement Belongs to the People என்கிற ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அண்ணாமலை துவங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, கடந்த வருடம் டிசம்பர் மாதமே கட்சியிலிருந்து விலக முடிவெடுடுத்தேன். ஆனால் தேர்தல் பணியை முடித்துவிட்டு போக சொன்னார்கள் எனவே ஒரு தொண்டனாக அதை செய்தேன். இப்போது புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன், அனைவருக்கும் அரசியல் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், நாம் செய்யப்போவது சாதாரண வேலை அல்ல, மிகப்பெரிய விஷயம், கொஞ்சம் பொறுமை தேவை, நாங்கள் யாருக்கும் போட்டி கிடையாது.
தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க திட்டமிட்டிருருக்கிறோம். கண்டிப்பாக அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம். 2020ம் வருடம் நடிகர் ரஜினிகாந்த் சார் என்னை அவரது கட்சியில் சேர அழைத்தார்.
ஆனால் ஏற்கனவே பாஜகவில் இணைவதாக வாக்குறுதி கொடுத்து விட்டதால் அவரின் கட்சியில் இணைய முடியவில்லை. இதை அவரிடமே தெளிவாக கூறினேன்.. அவரும் வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தார் என்று அண்ணாமலை கூறியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.