தவறவிடப்பட பெரும் தொகை பணம் ; கண்டெடுத்த யாழில் பொலிஸ் அதிகாரி என்ன செய்தார் தெரியுமா!
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் , புத்தளம் சென்றிருந்தபோது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டு, செய்வதறியாது திகைத்து நின்றார். அதில் 30,000 ரூபாய் பணமும், உயிருக்கு நிகரான முக்கிய ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜெயமகா , கடமை நிமித்தம் அங்கு சென்றிருந்த அதிகாரி, வீதியில் கிடந்த பணப்பையை கண்டு எடுத்ததுள்ளார்.

அதிலிருந்த ஆவணங்களை ஆராய்ந்து உரியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தார்.
இதனையடுத்து இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கே அந்த நபரை வரவழைத்து, ஒரு ரூபாய் கூட குறையாமல் அவரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் , யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேர்மையான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.