பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; அவதானம் மக்களே
நிலவும் மழைடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (21) பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

அவதானம் மக்களே
குறித்த பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி நிலவரத்திற்கு அமைய, பின்வரும் பகுதிகளில் உள்ள மக்கள் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, எலபாத மற்றும் இரத்தினபுரி.
பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, ஹல்தும்முல்லை மற்றும் பசறை.
கேகாலை மாவட்டம்: வரகாப்பொல, ரம்புக்கனை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, மாத்தளை, அம்பன்கங்க கோரளை மற்றும் உக்குவளை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட.
இரத்தினபுரி மாவட்டம்: கொலொன்ன, இம்புல்பே, நிவித்திகலை, வெலிகேபொல, பலங்கொடை, கலவானை, எஹெலியகொட மற்றும் அயகம.
தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் பாதுகாப்புப் பிரிவினரும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.