யாழில் கிணற்றை சுத்தம் செய்தவர்களுக்கு காத்திருந்த ஷாக் ; நாளைய தினம் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறொன்றில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றினை சுத்தம் செய்து இறைத்த போது , கிணற்றினுள் இருந்து உரைப்பை மூட்டைகள் மீட்கப்பட்டன.

அவற்றினை மேலே எடுத்து சோதனையிட்ட போது, அவற்றினுள் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதை அடுத்து , அது தொடர்பில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன், அவற்றினை மீட்க நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற அனுமதியினை பெற்று , பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.