ஈவிரக்கமின்றி ஊழியரை தாக்கிய பிரபல கொத்து உணவக உரிமையாளர்; காணொளியால் கைது
இலங்கையில் பிரபலமான கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளர், தனது ஊழியர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மே 5 ஆம் தேதி நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திட்டி, உடல்ரீதியாகத் தாக்கும் காணொளி
இந் நிலையில் சந்தேக நபர் இன்று (30) மகாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊழியரை வாய்மொழியாகத் திட்டியும், உடல்ரீதியாகத் தாக்கியும் காட்டும் சிசிடிவி காணொளிக் காட்சிகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவிய இந்தக் காணொளிக் காட்சிகள், பரவலான பொது கவனத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர்.
காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் மகாரகம பொலிஸ் ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியது.