பலத்த பாதுகாப்புடன் வந்த பிள்ளையான்; வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பிய நீதிமன்றம்!
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் உபவேந்தர் கடத்தல் உட்பட கொலைச்சம்பவம்
முதலாம் இணைப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் உட்பட கொலைசம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட இருவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றையதினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.