கோட்டா கோ கமவை அடித்து கலைத்த இராணுவம்!
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்கள் இன்று அதிகாலை பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினருடன் மோதினால் அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உள்ள நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளை கைபற்றுவதற்கு படையினர் முற்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு முற்பட்ட போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது சிலர் காயமடைந்ததாகவும் 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனதிபதியாக ரணில் பதவி ஏற்று 24 மணி நேரத்தில் கோட்டா கோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரால் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.