இலங்கையில் வாகனங்களை விற்பனை செய்ய காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
எதிர்வரும் காலங்களில் ‘Open Papers’ எனப்படும் திறந்த ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகனம் ஒன்றை உரிமை மாற்றம் செய்யும்போது, உரிமையை மாற்றுபவர் மற்றும் புதிய உரிமையாளர் ஆகிய இருவரும் ‘MTA 6’ எனப்படும் உரிய ஆவணத்தில் கையொப்பமிட்டு, அதன் குறிப்பிட்ட பிரதியை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகனங்களைப் பயன்படுத்தி நாட்டில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.