பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் ஏமாத்திட்டார்; பெண் தற்கொலை முயற்சி!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது சோசியல் மீடியாவில் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்குமரன் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரானார்.

பெண் வெளியிட்ட வீடியோ
இன்னிலையில் தன்னை ஏமாற்றி விட்டதாக சோசியல் மீடியா பிரபலமான வஹிதா என்ற பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். பெண் வெளியிட்ட வீடியோவில்,
நான் ஏற்கனவே கல்யாணம் முடிந்தவள் என்பது அவருக்கு தெரியும். 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான் பிரேக் அப்பில் இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். நான் காதலால் ஏமாற்றப்பட்டதால் அவருடைய காதல் எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியும் கொடுத்தது.
நானும் அவரும் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டோம். காதல் தோல்வியில் இருந்த என்னை அவர் பேசியே மயக்கிவிட்டார் என அந்த பெண் காணொளியில் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
தற்கொலை முயற்சி செய்த பெண்ணை, மீட்டு வைத்தியசாலையில் சேர்த்து நிலையில் இப்போது உயிர் பிழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முத்துக்குமரன் இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
"நானும் வஹாதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அது குறித்து தான் நான் கிளாரிட்டி கேட்டிருக்கிறேன். அவர் ஏற்கனவே கொஞ்சம் டிஸ்டர்ஷனாக இருந்தார்" என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.