விமானப்படை தளபதியை சந்தித்த முக்கியஸ்தர்
இலங்கை விமானப்படைத் தளபதி சுதர்சன பத்திரனவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இன்று கொழும்பில் சந்தித்தார்.
சதிப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங்,
இந்தோனேஷியா-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு வலுவான மற்றும் பாதுகாப்பான இலங்கை முக்கியமானது என டுவிட் செய்துள்ளார்.
A strong, secure Sri Lanka is critical to the stability & prosperity of the Indo-Pacific. Productive meeting w/ Air Marshall Sudarshana Pathirana of the @AirforceLK about our efforts to strengthen defense cooperation in the region & our ongoing commitment to Sri Lankan security. pic.twitter.com/W4VCRcWfbP
— Ambassador Julie Chung (@USAmbSL) May 27, 2022
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு குறித்தும் இதன்போது விமானப்படைத் தளபதி நினவு கூர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அண்மையநாட்களாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங் பல்வேறு முக்கியதரப்பினரை சந்தித்து வருகின்ற,மை குறிப்பிடத்தக்கது.

