கட்டுநாயக்க அதிவேக வீதியில் விசேட சலுகையுடன் அறிமுகமாகும் புதிய சேவை
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணம், வங்கி அட்டைகள் மற்றும் ETC (Electronic Toll Collection) தொழில்நுட்பம் மூலம் கட்டணங்களைச் செலுத்தும் சேவையை மேலும் விரிவுபடுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்று (15) முன்னெடுக்கப்பட்டன.

10% கழிவு
ETC வசதியைப் பயன்படுத்துபவர்களுக்காக நுழைவு மற்றும் வெளியேறும் தனி வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பயணக் கட்டணத்தில் 10% கழிவும் வழங்கப்படவுள்ளது.

தற்போது பேலியகொடை, கெரவலபிட்டிய, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க இடமாற்றல் மையங்களில் இந்த வசதி கிடைக்கின்றது. மேலும், ETC சேவைக்கான பதிவு தற்போது RDA Exway இணையத்தளம் மூலம் இலகுவாக மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த பின்னர் RFID Tag பெற்றுக்கொண்டு, இணையத்தளம் அல்லது GovPay ஊடாக கணக்கை Top-up செய்து தானியங்கி கட்டண வசதியைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.