கலஹாவில் மண்சரிவில் புதையுண்ட குடும்பங்கள்; மீட்புப் பணிகள் தாமதம்
கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும், குறித்த இடத்துக்கு மீட்புப் பணியினர் இதுவரை செல்லவில்லை எனவும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.

72 மணித்தியாலங்களில் 46 பேர் பலி
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது