புளூடூத் பயன்படுத்தாத கமலா ஹாரிஸ்! காரணம் இதுவா?
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் புளூடூத் பயன்படுத்தாது வயர்டு இயர்போன்களையே பயன்படுத்தி வருகிறார்.
57 வயதான கமலா ஹாரிஸ் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜோ பிடனை வாழ்த்துகையில் , ஹாரிஸ் தனது தொலைபேசியை ஒரு கையில் பிடித்திருப்பதைக் காணலாம்.
அதோடு அவர் சில சமயங்களில், வயர்டு இயர்போன்களைப் பயன்படுத்துவதைக் காணலாம். கமலா ஹாரிஸ் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார். புளூடூத் இணைப்புகளை ஹேக் செய்ய முடியும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன.

புளூடூத் இணைப்பை வேறொருவர் ஹேக் செய்து சாதனத்தைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற தகவலை அவர்கள் அறிய முடியும்.
அதோடு கடவுச்சொற்கள் அல்லது பிற முக்கிய தகவல்களைப் பகிர்வதற்கு புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, ஹாரிஸ் வகிக்கும் உயர் பதவியைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தை எச்சரிக்கையுடன் கையாள்கிறார்.
அவர் புளூடூத்தை பயன்படுத்தாமல் தவிர்த்து வயர்லெஸ் ஹெட்போன்களைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம் எனவும் கூறப்படுகின்றது.