யாழின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்குவது குறித்து கமல் குணரட்னின் முக்கிய தகவல்
யாழில் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன (Kamal Gunaratne) கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் (14-12-2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது.
சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் உடன்படிக்கைகளினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அனுமதிக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஈராண்டு காலத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.