களுத்துறை மாணவி மரணம்; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
களுத்துறையில் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியரையும் மற்றுமொருவரையும் விள்ளமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
களுத்துறை நகரின் ரயில் பாதையை அண்மித்த பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாணமான சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
மாணவியின் சடலம் கடந்த 6 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த சில தகவல்களின்படி மீட்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த மாணவி களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடையவர் எனவும், சடலம் உயிரிழந்தவரின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.