பதின்ம வயது சிறுமிக்கு பெரியப்பா வீட்டில் நடந்த சம்பவம்; கலக்கத்தில் பெற்றோர்
15 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் படல்கும்பர அலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி ஆகஸ்ட் 26 ஆம் திகதியன்று களனி பிரதேசத்தில் உள்ள தன்னுடைய அக்காவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தன்னுடைய இளைய மகளை காணவில்லை என தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தை பொலிஸில் முறைப்பாடு
அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். வைத்திய பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அச்சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், தான் அலுப்பொத்த பிரதேசத்தில் இளைஞனுடன் காதல் வயப்பட்டிருந்தேன். அவருடன் பிப்ரவரி 28ஆம் திகதி பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அங்கு பெரியப்பாவின் மகள் மட்டுமே இருந்தாள். சிறுதி நேரத்தில் காதலன் அந்த வீட்டுக்கு வந்த நிலையில் காதலனுடன் கணவன் மனைவியாக இருந்தேன் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தாங்கிக்கொள்ள முடியாமையால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காதலனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிஸார் , மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக படல்கும்பர பொலிஸார் தெரிவித்தனர்.