விமானத்தில் மல்லிகைப்பூ கொண்டு சென்ற நடிகைக்கு லட்சம் ரூபா அபராதம்!
பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சென்றார். இதற்கான தன்னுடன் சுமார் 15 செ.மீ. அளவு கொண்ட மல்லிகைப்பூவை நவ்யா நாயர் கொண்டு சென்றுள்ளார்.
கடுமையான உயிரியல் பாதுகாப்பு (Biosecurity) சட்டங்கள்
மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் நடிகை நவ்யாவின் உடைமைகளை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அதில் மல்லிகைப்பூ இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு விமான நிலையத்திலே 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து விக்டோரியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
தனது தந்தை தனக்கு மல்லிகைப்பூ வாங்கித் தந்ததாகவும் அதை இரண்டாக பிரித்து ஒரு பாதியை கொச்சியில் இருந்து சிங்கப்பூர் வரை தனது தலையில் வைத்திருந்ததாகவும் மீதி பாதியை தனது கைபையில் வைத்திருந்ததாகவும் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் மிகவும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு (Biosecurity) சட்டங்கள் உள்ளன. அவற்றின்படி, மல்லிகைப்பூ அல்லது வேறு எந்தப் புதிய தாவரப் பொருட்களையும் விமானத்தில் கொண்டு செல்வதற்கு பொதுவாக அனுமதி இல்லை.
வெளிநாடுகளில் இருந்து வரும் பூக்கள் அல்லது தாவரங்களில், ஆஸ்திரேலியாவில் இல்லாத பூச்சிகள், நோய்க்கிருமிகள் அல்லது களை விதைகள் போன்றவை இருக்கலாம் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது