மறைவில் இருந்து வெளிப்பட்ட நித்தியானந்தா ; வந்தது புத்தாண்டு செய்தி
அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும் என கைலாசா நாட்டின் அதிபதி என கூறும் சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியான நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு செய்தியாக நித்தியானந்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
“இந்த 2026ஆம் ஆண்டில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவின் முடிவில் “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி பிரபலமடைந்தார்.
அத்துடன் பல பாலியல் குற்றச்சாட்டுக்களிலும் சிக்கி உலகளவில் பேசப்படும் இவர், இந்திய பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறி, கைலாசா என்ற தீவை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு ; எதிர்கட்சி உறுப்பினருக்கு வீடு தேடிச் சென்று கொழும்பு மேயர் செய்த செயல்
அதேவேளை நித்தினாந்தா இறந்துவிட்டதாக செய்திகள் பரவியபோதும் அதை அவரும் அவரது சீடர்களும் மறுத்துவந்தனர்.
அதுமட்டுமல்லாது , நித்யானந்தா உரையாற்றுவது போன்ற பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அவரது புகழ்பாடும்சிலரும் இருக்கத்தான் செய்கின்றர்கள் .