ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Sahana Oct 06, 2024 08:42 PM GMT
Sahana

Sahana

Report

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் பொய்யானது

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் பொய்யானது

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.

இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் | Justice Will Be Served For Victims Easter Attack

ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகும் சசிகலா ரவிராஜ்

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகும் சசிகலா ரவிராஜ்

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் | Justice Will Be Served For Victims Easter Attack

இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாதெனவும், வெளிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டுனெவும் சுட்டிகாட்டியுள்ளார்.

இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்பு பட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் | Justice Will Be Served For Victims Easter Attack

அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறியுள்ளார்.

சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் | Justice Will Be Served For Victims Easter Attack

கடந்துபோன 05 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21 ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வெளிப்படுத்தினர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிக்குகளின் தலைமையில் ஆக்கிரமிக்கப்படும் வடக்கு - கிழக்கு காணிகள்

இரண்டு பிக்குகளின் தலைமையில் ஆக்கிரமிக்கப்படும் வடக்கு - கிழக்கு காணிகள்

இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை உள்ளதெனவும், அவரின் நேர்மையை பாராட்டுவதாகவும் தெரிவித்த கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதன்படி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் ஸ்தலத்தில் பலி

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் ஸ்தலத்தில் பலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US