எகிறும் தங்க விலையால் கவலையில் நகைப்பிரியர்கள்!
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளதனால் தங்க நகை வாங்க காத்திருந்தோர் கவலையில் உள்ளனர்.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அந்தவகையில் சென்னையில் நேற்றையதினம் (13) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று மார்ச் 14ஆம் திகதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,135க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,025க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.4,0200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.