எகிறும் தங்கம் விலையால் நகைப்பிரியரகள் அதிர்ச்சி!
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத நிலையில் அதிகரித்து வருகின்றமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் நேற்று (22) ஒரு பவுன் தங்கம் 280 ரூ பா அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இன்று (23) 22 கரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒருகிராம் ரூ. 5 875 இற்கு விற்க்கப்படுகின்றது. ஒரு சவரன் ரூ 47 , 000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 13 உயர்ந்து , ஒரு கிராமுக்கு ரூ 4.813 இற்கு விற்பனை செய்யப்படுவதுடன், சவரனுக்கு ரூ 104 உயர்ந்து ரூ 38 504 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளி விலை
அதேசமயம் வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.50 -க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.80,500-க்கு விற்பனையாகிறது.