காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்
காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காத்தான்குடி சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் இன்று(18) காலை இளைஞர் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உள் நுழைந்த மற்றுமொரு இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்தார்.

தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரண்
படுகாயமடைந்த இளைஞன் மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
இளைஞர்கள் இருவருக்கும் இடையே ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் கைகலப்பு இடம்பெற்று வந்த பிண்ணனியில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.