மீண்டும் வழமைக்கு திரும்பிய மற்றுமொரு ரயில் போக்குவரத்து
டித்வா புயலின் பாதிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் பாதையின் பதுளை மற்றும் அம்பேவலை இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன நேற்று (18) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை
சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையில் பதுளை மாவட்டத்திற்குட்பட்ட 70 கிலோமீற்றர் பகுதி முழுமையாக தடைப்பட்டிருந்ததாகவும், அந்தப் பகுதி தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"பதுளை மாவட்டத்தில் உள்ள மலையக ரயில் பாதையில் 70 கிலோமீற்றர் எமக்குச் சொந்தமானது. அது தற்போது திருத்தி முடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி காலை அம்பேவலையில் இருந்தும் பதுளையில் இருந்தும் இரு மார்க்கங்களிலும் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்.
இது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் மாதம். நுவரெலியா மற்றும் எல்ல பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலை எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த பாதை துரிதமாக சீரமைக்கப்பட்டது" என அவர் கூறினார்.