இளைஞர்களால் பாலைவனமாக மாறும் யாழ்ப்பாணம் !
யாழில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டு புலம்பெயர்வு பாரிய தாக்கங்களை உண்டு பண்ணுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

வடக்கை விட்டு வெளியேறும் நிலை
ஊடக நிகழ்ழ்சியில் ஒன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் போன்ற குற்றச்செயல்களால் இளைஞர்களும் படித்த சமூகமும் வடக்கை விட்டு வெளியேறும் நிலை உருவாகி வருவதாக சந்திரசேகர் கவலை வெளியிட்டார்
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் மக்களை பாதுகாப்பதற்காக அந்த பிரதேசங்களை துரித அபிவிருத்தியை நோக்கி நகர்த்த வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.