காதலால் இடம்பெற்ற கொலை; பறிபோன 16 வயது சிறுமியின் உயிர்
16 வயது சிறுமியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் நேற்று (14) இரவு 16 வயது சிறுமியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம்
காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இக் கொலை நடந்திருக்கலாம் என கம்பொல பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவரைக் கைது செய்ய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல் சம்பவ இடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் உள்ளதோடு, நீதவான் விசாரணைக்குப் பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.