முக்கிய தமிழர் பகுதியில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த மர்ம பொருள்!
யாழ். வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (27-11-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 03 பிளாஸ்டிக் பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 17 பார்சல்களில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 34 கிலோ 400 கிராம் எடை கொண்டது எனவும் மொத்த மதிப்பு 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.