யாழ். தையிட்டி விகாரையை புகைப்படம் சம்பவம் ; கைதானவர்கள் பிணையில் விடுதலை
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரையை புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த இருவரும் தையிட்டி விகாரை தொடர்பான பகுதியில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி மகிந்தன் கந்தசாமி முன்னிலையாகியிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.