யாழில் கொலை செய்துவிட்டு லண்டனில் மறைந்திருந்த நபர் அதிரடி கைது!
2001ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் உள்நாட்டு யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த 2வது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தரபாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோ பொலிஸ் உயர் அதிகாரி டொமினிக் மேர்பி இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்த பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் உள்ளவர்கள் உள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் அவர்கள் இன்னமும் விபரங்களை தெரிவிக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விபரங்கள் உள்ளவர்களை பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம் நீங்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித்தகவல்கள் உள்ளவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள டொமினிக் மேர்பி இலங்கையில் அந்த நாட்களில் உறவினர்கள் வசித்தவர்கள் – பின்னர் அந்த உறவினர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2001 சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின்படி 2023ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி லண்டனின் தென்பகுதியில் வசித்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது 2001 இன் பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பானது இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்எனவும் தெரிவித்துள்ளனர்.
2022 இல் பெப்ரவரியில் இதே குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இது 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடையது எனவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார் விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன 2017 இல் பயங்கரவாத பொலிஸின் யுத்த குற்ற பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவையே இந்த குற்றங்கள்.எனவும் தெரிவித்துள்ளனர்.