யாழ் நபர் ஒருவர் புனிதமான உடையுடன் செய்த மோசமான செயல் ; மக்களே அவதானம்
மன்னார் மாவட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர் ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையுடன் தன்னை குருவாக காண்பித்து வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
முத்தரிப்புத்துறை, வங்காலை போன்ற இடங்களில் அவர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மக்களிடம் வேண்டுகோள்
குறித்த நபர் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு துறவற சபை குருவாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
அவர் பற்றி மன்னார் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பஸ் தரிப்பிடத்தில் வைத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்த பொலிஸார் அவர் உண்மையான குருவானவர் இல்லை என்பதையும் சிறியதொரு கிறிஸ்தவ சபை உறுப்பினர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.
குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை இவ்வாறானவர்கள் மட்டில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மன்னார் ஆயர் இல்லம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        