யாழில் இரவு பயங்கரம்... 20க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல்!
யாழில் 20க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று பண்ணை வீடொன்றின் மீது, தாக்குதலை மேற்கொண்டு, தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02-06-2024) இரவு அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி, கைத்தொழில் பேட்டையில் உள்ள பண்ணை ஒன்றினுள் காணப்பட்ட வீடொன்றின் மீதே குறித்த வன்முறை கும்பல் தாக்குலை மேற்கொண்டுள்ளது.
குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மீது சம்பவ தினத்தன்று மதியம் வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 20க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளில் வந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பண்ணை வீட்டினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்கும், வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ வைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்ததுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்.

தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் முன் பகையே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.