திருட்டுத்தனமாக உள்ளே சென்ற பவானந்தராஜா எம்.பியால் சர்ச்சை!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்றையதினம் நடைபெறுகின்ற நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
குறித்த கூட்டத்திற்கு தமக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு வெளியே முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

தாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்றும், சமூகமட்ட அமைப்புக்களுக்கு வழங்குகின்ற அனுமதி தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா வேறொரு வாகனத்தில் திருட்டுத்தனமாக உள்ளே சென்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன் ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தமக்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.