சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் அறைகளில் சிக்கிய பொருட்கள்!
சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் அறைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் இருவருடன் சேர்த்து சுமார் 150 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அதேவேளை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு நிதிமோசடி குற்றச்சாட்டில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.