கடவுச்சீட்டு வழங்கியது யார்? வவுனியாவில் பெக்கோ சமனின் மனைவி
கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் (10) அழைத்து வரப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவரால் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மோசடியாக வழங்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு பெக்கோ சமனின் மனைவி அழைத்து வரப்பட்டார்,
மேலும் பெக்கோ சமனின் மனைவி மீதான வழக்கை இந்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.